கேள்விகளும் பதில்களும்
பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்ட�
பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா
நபி
(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மிஃராஜ் பயணம் அவர்களின் பிறப்பு மக்கா
வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய வரலாற்றுச் சம்பவங்கள்
நினைவூ கூறும் விதமாக கொண்டாடுவது தவறல்ல என்று யூசுஃப் அல்கர்ளாவி என்பவர்
கூறியதாகச் சொல்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்
குர்ஆன்,
ஹதீஸ் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு யாருடைய கூற்றையும் மார்க்க ஆதாராமாக
எடுக்க்க்கூடாது. யூசுஃப் கர்ளாவி கொடுக்கும் தீர்ப்பைக் கண்மூடிக்கொண்டு
ஏற்பதற்கு அவர் ஒன்றும் அல்லாஹ்வின் தூதரில்லை.
எல்லோரையும்
போன்று அவரும் சாதாரண மனிதர். மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் மற்ற
அறிஞர்களிடம் தவறு ஏற்பட்டிருப்பதைப் போன்று இவருடைய தீர்ப்புகளிலும் நிறைய
தவறு இருக்கின்றது. வட்டி போன்ற பெரும்பாவமான காரியங்களை தற்காலத்தில்
செய்யலாம் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சமகாலத்தில் வாழும் பிரபலமானவர்களில் அறிவுத்திறனும் ஆராய்ச்சித் திறனும் அற்ற கூறு கெட்டவராக இவர் காட்சியளிக்கிறார்.
எனவே இவர் மட்டுமல்ல மார்க்கத்திற்கு மாற்றமான கருத்தை யார் சொன்னாலும் அந்தக் கருத்து தூக்கி எறியப்பட வேண்டியது.
இஸ்லாத்தில்
கொண்டாடி மகிழ்வதற்கு இரண்டு பெருநாட்களைத் தவிர வேறு எதுவுமில்லை என
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள்.
மதீனாவாசிகள்
அவர்களாக பெருநாட்களை உருவாக்கி கொண்டாடி வந்தனர். இதை விட்டுவிட்டு
அல்லாஹ் கற்றுக்கொடுத்த நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை
மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
உத்தரவிட்டார்கள்.
959 حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ
قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ
الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ
قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ
الْفِطْرِ رواه أبو داود
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு
இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள்.
இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று
நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த
இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும்
விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.
அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம், அவர்களின் பிறப்பு,
மக்கா வெற்றி, மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் இது போன்ற முக்கியமான
நிகழ்வுகள் நடந்த நாட்களைக் கொண்டாடலாம் என்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
இதை ஏன் சமுதாயத்துக்குக் கற்றூக் கொடுக்கவில்லை? இவை அநாச்சாரம் என்பதற்கு இந்த ஒரு கேள்வியே போதுமானது.
இஸ்லாமிய
வரலாற்றில் சிறப்புமிக்க சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் படித்து
படிப்பினை பெறுவது தான் அறிவாளியின் செயல். இதை விடுத்து கணக்கின்றி
கொண்டாட்டங்களை அடுக்கிக்கொண்டு போது நரகத்தில் இழுத்துச் செல்லும்
பித்அத்தாகும்.
நன்றி-ஆன்லைன் பி.ஜெ
கேள்விகளும் பதில்களும்
பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்
கேள்வி எந்த ஒரு காரியம் செய்ய துவங்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி துவங்குவது சிறந்தது. சாப்பிட துவங்கும் முன் அதே போல் சொல்வதே நல்லது. அப்படி சொல்ல மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் முன் சொல்ல வேண்டிய பிஸ்மில்லாஹ்வை கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்லலாமா?
பதில்
1781 حَدَّثَنَا
أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا
هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنْ أُمِّ كُلْثُومٍ
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ
فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ
وَآخِرِهِ وَبِهَذَا الْإِسْنَادِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ طَعَامًا فِي سِتَّةٍ مِنْ
أَصْحَابِهِ فَجَاءَ أَعْرَابِيٌّ فَأَكَلَهُ بِلُقْمَتَيْنِ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ لَوْ
سَمَّى لَكَفَاكُمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
وَأُمُّ كُلْثُومٍ هِيَ بِنْتُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ
رَضِيَ اللَّهُ عَنْهُ رواه الترمدي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் உணவைச் சாப்பிட்டால் (ஆரம்பத்தில்) பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். அதன் ஆரம்பத்திலே பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறட்டும்.
அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)
நூல் திர்மிதி (1781)
மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்தான் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். மற்ற விஷயங்களுக்கு அவ்வாறு கற்றுத்தரவில்லை.
மற்ற காரியங்களைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். மறந்து விட்டால் அதற்காக வேறு எதனையும் கூற வேண்டியதில்லை. வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை பொதுவான ஆதாரம் இருந்தால் அது போன்ற அனைத்துக்கும் அதைப் பொருத்திக் கொள்ளாம். குறிப்பிட்ட ஒரு காரியம் தொடர்பாக கூறப்பட்டதை மற்ற காரியங்களுக்குப் பொருத்திக் கொள்ளக் கூடாது.
நன்றி-ஆன்லைன் பி.ஜெ
பயனுள்ள தகவல்கள்
மாணவர்கள் அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்
அரசின் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவங்கள்
(10,12 ஆம் வகுப்பு மற்றம் கல்லுரி பயில்பவர்களுக்கு)
11,12 மற்றும் கலை , மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுகு
1 to 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு
பி.யி, எம்பிபிஎஸ், பிஎல், சிஏ, படிக்கும் மாணவர்களுக்கு
பயனுள்ள தகவல்கள்
சிறுபான்மையினருக்கு இலவச தொழில் பயிற்சி
தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு
அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக் குறிப்பு:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி கட்டனம் பயிற்சி நிலையத்துக்கு அரசால் அளிக்கப்படும்.
எலக்ட்ரிக்கல் வயரிங், ரீவைண்டிங், பிட்டர், வெல்டர் மற்றும் கணினி பயிற்சியும், புடவைகளில் கல் பதித்தல், தையல் பயிற்சி, நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் ஏர்கண்டிஷனிங் – ரெப்ரிஜெரேஷன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சிகளை அளிக்க விரும்பும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்களது பயிற்சி கட்டண விவரத்துடன் மேற்கண்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
நன்றி-tntj.net
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக் குறிப்பு:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் மற்றும் பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பயிற்சி நிலையங்கள் மூலம் இலவசமாக அளிக்கப்பட உள்ளன. இதற்கான பயிற்சி கட்டனம் பயிற்சி நிலையத்துக்கு அரசால் அளிக்கப்படும்.
எலக்ட்ரிக்கல் வயரிங், ரீவைண்டிங், பிட்டர், வெல்டர் மற்றும் கணினி பயிற்சியும், புடவைகளில் கல் பதித்தல், தையல் பயிற்சி, நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் ஏர்கண்டிஷனிங் – ரெப்ரிஜெரேஷன் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ளவர், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வருமானச் சான்றுடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பயிற்சிகளை அளிக்க விரும்பும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் தங்களது பயிற்சி கட்டண விவரத்துடன் மேற்கண்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
நன்றி-tntj.net
கேள்விகளும் பதில்களும்
தொடர் உதிரப்போக்குள்ளவர் தொழுவது எப்படி?
கேள்வி:மாதவிடாய் தொடர்ந்து வந்தால் தொழுவது பற்றிய சட்டம் என்ன?
பதில்:
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக உதிரப் போக்கு ஏற்படும். குறைந்தபட்சம் மூன்று நாட்கள், அதிகப்பட்சம் ஏழு நாட்கள் என்ற கணக்கையெல்லாம் தாண்டி உதிரப் போக்கு ஏற்படும். அதற்கும் இந்த எளிய மார்க்கம் அளிக்கும் அருமையான சலுகையைப் பாருங்கள்.
ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு, "இல்லை! அது ஒரு வித நோயால் ஏற்படுவதாகும். அது மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும் போது தொழுகையை விட்டு விடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவி விட்டு தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்து கொள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 228
இது போன்ற நோய்க்கு ஆட்பட்ட பெண்கள், இந்த நோய் ஏற்படுவதற்கு முன்னால் வழக்கமாக மாதவிலக்கு வந்த நாட்களைக் கணக்கிட்டு அதையே மாதவிடாயாகக் கொள்ள வேண்டும். அந்த நாட்களுக்குப் பின் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்க வேண்டியதில்லை; உளூச் செய்தால் போதும் என்று கூறி அவர்களுக்குச் சலுகையை வழங்குகிறது.
குளிப்பது கட்டாயமில்லை என்றாலும் தொடர் உதிரப்போக்கு ஏற்பட்ட பெண் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா என்ற பெண்ணுக்கு ஏழு வருடங்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்பட்டது. இது குறித்து அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது (அதற்காக குளியல் கடமை இல்லாவிட்டாலும் நல்லது என்ற அடிப்படையில்) குளித்துக்கொள்ளுமாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு இது இரத்தநாள நோயாகும். (மாதவிடாயன்று) என்று கூறினார்கள். எனவே, உம்முஹபீபா ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராக இருந்தார்.
நூல் புகாரி (327)
தொடர் உதிரப் போக்குள்ள பெண்கள் தொழுகையை நிறைவேற்றியுள்ளார்கள் என்பது மட்டுமின்றி இஃதிகாஃப் (பள்ளியில் தங்குதல்) என்ற வணக்கத்தைக் கூட செய்திருக்கிறார்கள் என்ற செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர் உதிரப் போக்குடைய அவர்களின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். சிவப்பு நிறத்தையும் மஞ்சள் நிறத்தையும் அவர் காண்பார். சில வேளை அவருக்கு அடியில் நாங்கள் ஒரு தட்டை வைப்போம். அவர் தொழுவார்.
நூல்: புகாரி 2037
கேள்விகளும் பதில்களும்
மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா?
மழையின்போது ஜம்வு செய்து தொழலாமா?
மழை நேரத்தில் மஃக்ரிப் இஷாத் தொழுகைகளை சேர்த்து தொழலாமா? அவ்வாறு சேர்த்துத் தொழும் போது அதை ஜமாஅத்துடன் தான் நிறைவேற்ற வேண்டுமா?
ஃபாஹிம்
பதில்
உள்ளூரில் இருந்தாலும் மழை நேரத்தில் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. லுஹரையும் அஸரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். மஃரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுகலாம். பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறியலாம்.
1151و
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا
حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَأَبُو
سَعِيدٍ الْأَشَجُّ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا
وَكِيعٌ كِلَاهُمَا عَنْ الْأَعْمَشِ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ
سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ
وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ فِي غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ
فِي حَدِيثِ وَكِيعٍ قَالَ قُلْتُ لِابْنِ عَبَّاسٍ لِمَ فَعَلَ ذَلِكَ
قَالَ كَيْ لَا يُحْرِجَ أُمَّتَهُ وَفِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ قِيلَ
لِابْنِ عَبَّاسٍ مَا أَرَادَ إِلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لَا
يُحْرِجَ أُمَّتَه رواه مسلم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.
வகீஉ என்பவரின் அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : முஸ்லிம் (1272)
மதீனாவில்
இப்படி செய்துள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் பயணிகளாக இல்லா
விட்டாலும் ஜம்மு செய்து தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை, அச்சம் போன்ற காரணங்கள் இல்லாமல் சாதாரண சூழ்நிலை உள்ளபோது தொழுகையைச் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். இதை ஆதாரமாக்க் கொண்டு இதை நாம் வழக்கமாக்கி தினமும் ஜம்மு செய்து தொழக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வழமையாகச் செய்யவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையில் இது எப்படி அரிதாக நடந்த்தோ அது போல் நாமும் அரிதாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழை
அச்சம் போன்ற காரணம் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்மு
செய்திருக்கும் போது மழை அச்சம் கலவரம் போன்ற நேரங்களில் தாராளமாக
இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மழை, அச்சம் போன்ற காரணங்கள் இருக்கும் போது இந்தச் சலுகையை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை இந்த செய்தி கொடுக்கின்றது.
போரில் எதிரிகள் தாக்கிவிடுவார்கள் என்ற அச்சம் இருக்கும் என்பதால் இந்த நேரத்தில் தொழுகைகைள சேர்த்துத் தொழுவதை மார்க்கம் அனுமதித்துள்ளது. மேற்கண்ட ஹதீஸில் எதிரிகளின் பயத்துடன் மழையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. மழை நேரத்திலும் இந்த அனுமதி உண்டு என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
மழை பெய்யும் நேரத்தில் கடமையான தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து நிறைவேற்றாமல் வீட்டிலேயே தொழுது கொள்வதற்கும் மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.
666 حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ
أَنَّ ابْنَ عُمَرَ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ
وَرِيحٍ ثُمَّ قَالَ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ ثُمَّ قَالَ إِنَّ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ
الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ يَقُولُ أَلَا
صَلُّوا فِي الرِّحَالِ رواه البخاري
குüரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு "ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்'' (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், "(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் "ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்'' என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்'' என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (666)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் தான் மக்கள் கூட்டாகத் தொழுது வந்தனர். தொழுகையைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே சாதாரண நேரங்களில் பள்ளிக்கு வர வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுகின்றது.
மழை நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டியதில்லை என்றால் கடமையான தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டியதில்லை என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.
எனவே மழைநேரத்தில் வீடுகளில் கடமையான தொழுகைகளைத் தனியாகவும் தொழுது கொள்ளலாம். வீட்டில் உள்ள நபர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நிறைவேற்றலாம்
நன்றி-onlinepj.com
நன்றி-onlinepj.com
கேள்விகளும் பதில்களும்
தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்?
தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்?
தஹஜ்ஜத் தொழுகையை எவ்வாறு தொழுவது? அதில் என்ன சூரா ஓத வேண்டும்?
சபீர் கான்
பதில்
இரவில்
இஷாவுக்குப் பிறகு நிறைவேற்றும் தொழுகைகளுக்கு இரவுத் தொழுகை என்று பெயர்.
இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். இதை நிறைவு
செய்யும் போது ஒரு ரக்அத்தைத் தொழுது ஒற்றைப்படையாக முடிக்க வேண்டும்.
இதனால் இரவுத் தொழுகைக்கு வித்ரு என்ற பெயரும் உள்ளது.
இதே
தொழுகையை இரவின் இறுதியில் தொழுதால் அதற்கு தஹஜ்ஜத் (இரவின் கடைசிப்
பகுதியில் நிறைவேற்றப்படும் தொழுகை) என்று சொல்லப்படுகின்றது. தஹஜ்ஜத்
தொழுகையில் நேரம் மட்டுமே வேறுபடும். தொழும் முறையில் வேறுபாடு இல்லை.
473 حَدَّثَنَا
أَبُو النُّعْمَانِ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ
عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ فَقَالَ كَيْفَ صَلَاةُ
اللَّيْلِ فَقَالَ مَثْنَى مَثْنَى فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ
بِوَاحِدَةٍ تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْت رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளியில் அமர்ந்துகொண்டிருந்த
மக்களுக்கு) உரையாற்றிக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒரு மனிதர் வந்து, "இரவுத் தொழுகை எவ்வாறு (தொழவேண்டும்)?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழவேண்டும்; சுப்ஹுத்
தொழுகையை (அதன் நேரம் நுழைந்து விட்டது பற்றி) நீங்கள் அஞ்சினால்
(கடைசியில்) ஒற்றையான ஒரு ரக்அத் தொழுது கொள்வீர்களாக! நீங்கள் தொழுது
முடித்தவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்'' என்றார்கள்.
நூல் : புகாரி (473)
இரவில் மற்ற நேரங்களில் தொழுவதை விட இரவின் இறுதியில் தொழுவது அதிக சிறப்பு வாய்ந்தது.
1145 حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ
أَبِي سَلَمَةَ وَأَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ
إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ
يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ
مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, "என்னிடம்
யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன்.
என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும்
பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (1145)
இந்தத்
தொழுகையில் குறிப்பிட்ட சூராக்களை மட்டும் ஓத வேண்டும் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறவில்லை. குர்ஆனில் உள்ள சூராக்களில் எதை வேண்டுமானாலும்
ஓதிக்கொள்ளலாம்.
فَاقْرَءُوا
مَا تَيَسَّرَ مِنْ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى
وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِنْ فَضْلِ اللَّهِ
وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ
مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ
قَرْضًا حَسَنًا (20)73
குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.
அல்குர்ஆன் (73 : 20)
தஹஜ்ஜுத் பற்றி முழுமையாக அறிய
அறிவியல், கேள்விகளும் பதில்களும்
அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்
“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு
வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்:
புஹாரி, முஸ்லிம்
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால
கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை
நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப்
பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை
நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை
அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன்
அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட
அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான்
என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால்,
முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால்
இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின்
பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என
திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக
இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும்
வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின்
இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”
பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும்
நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து
வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில்
கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு
முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது
போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட
அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு
முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே
நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை
முஸ்லிம்கள் மேல் உள்ளது.
எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன.
இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத
அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல்,
அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் சில:
ஆழ் கடலில் அலை
இரு கடல்களுக்கிடையே தடுப்பு
நிலத்தடி நீர் சேமிக்கப்படும் முறை
திருப்பித் தரும் வானம்
பெருவெடிப்புக் கொள்கை
முகடாக வானம்
வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி
விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்
சூரியனும் கோள்களும் நகர்ந்து நீந்துதல்
வானத்திலும் பயணம் செய்ய வழிகள்
முளைகளாக மலைகள்
பூமியில் மலையின் உயரம் அளவிற்குக் கீழே செல்ல இயலாத நிலை
பூமி உருண்டை
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம்
ஓரங்களில் குறைந்து வரும் பூமி
மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடை குறைதல்
புவி ஈர்ப்பு சக்தி
விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம்
கலப்பு விந்து
கர்ப்ப அறையின் தனித்தன்மை
வேதனையை உணரும் நரம்புகள்
தேன் உற்பத்தி
இவையனைத்தையும் விளக்க முற்பட்டால், அதுவே தனி புத்தகமாக
ஆகிவிடுமாதலால், விரிவஞ்சி முஸ்லிம்களிடையே அதிகம் அறிமுகம் இல்லாத,
அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஓரிரு அறிவியல் உண்மைகளை காண்போம்.
தராசை நிலை நிறுத்திய அல்லாஹ்:
அவன் (அல்லாஹ்) வானத்தை உயர்த்தினான்; நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்!
என்று தராசையும் நிறுவினான். நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில்
குறைத்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 55:7-9)
மேற்கண்ட வசனம் இருபெரும் அறிவியல் உண்மைகளை நமக்கு
எடுத்தியம்புகின்றது. முதலாவதாக, “அல்லாஹ் வானத்தை உயர்த்தினான்” என்ற
வசனம் 20 ஆம் நூற்றாண்டின் அரும்பெரும் கோட்பாடான “பெரு வெடிப்புக்
கொள்கை”-யை கூறுகின்றது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பதாக இந்த
பேரண்டம் சிறு கேலக்ஸிகளாக மிக நெருக்கத்துடன், நட்சத்திரங்கள் பூமியோடு
நெருங்கிய நிலையிலேயே இருந்தது. பேரண்டத்தின் விரிவாக்க சக்தியின் மூலமாகவே
வானமும், வானத்தில் உள்ள பொருட்களும் பிரிந்து, உயர்ந்து சென்றுள்ளன. 1400
ஆண்டுகளுக்கு முன்பதாக எழுதப் படிக்கத் தெரியாத நபியான முஹம்மது (சல்)
அவர்களால், கண்டிப்பாக இச்செய்தியை கூறியிருக்க முடியாது; மாறாக,
இதனையெல்லாம் படைத்து, இயக்கும் ஏக இறைவனால் மட்டுமே இதனைக் கூறியிருக்க
முடியும் என்பது தெளிவு.
அடுத்ததாக, நிறுப்பதில் நாம் நீதி தவறக்கூடாது என்பதற்காக, வானத்தை
உயர்த்தி, தராசை நிறுவியதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்தை
புரிந்து கொள்வதற்கு முன்னதாக, பொருண்மை (Mass), எடை (Weight)
இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளின்
பொருண்மை என்பது அது தன்னகத்தே கொண்டுள்ள பருப்பொருளின் அளவைப் பொருத்தது;
எடை என்பது அப்பொருளின் மீது செயல்படும் (புவி) ஈர்ப்பு சக்தியின்
அளவாகும். எடுத்துக்காட்டாக, 25 கன சென்டி மீட்டர் கொள்ளளவுள்ள ஒரு
ரப்பராலான பொருளையும், அதே கொள்ளளவுள்ள ஒரு இரும்புக்கட்டியையும் தராசின்
இரு தட்டுகளில் வைத்தால், இரும்புக்கட்டி வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கி
இருக்கும். ஒரே அளவான பொருட்களாக இருப்பினும், இரும்பின் பொருண்மை,
ரப்பரின் பொருண்மையை விட அதிகம் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இதே தராசை
பூமியை விட்டு மேலே 2000 கி.மீ. உயரத்திற்குச் சென்று விண்வெளியில்
பிடித்தோமானால், இரு தட்டுகளும் சமமாகவே இருக்கும். பூமியில் வேலை செய்த
தராசு விண்வெளியில் வேலை செய்யவில்லையே ஏன்? ஏனெனில், நாம் தராசில் நீதி
தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்ணுக்குப் புலனாகாத ஈர்ப்பு சக்தியை
அல்லாஹ் ஏற்படுத்தி, அந்த புவியீர்ப்பு விசை மூலம் பொருட்களின் சரியான
எடையை நாம் அறிந்து கொள்ளச் செய்திருக்கிறான் என்பது இதிலிருந்து
விளங்குகின்றது.
வானத்தை கூரையாக்கிய அல்லாஹ்:
வானத்தைப் பாதுகாக்கப்பட்ட கூரையாக்கினோம்; அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்! (அல்குர்ஆன் 21:32)
பூமியின் ஒரு நாள் கணக்குப்படி, தினமும்
சுமார் 800 கோடி விண்கற்கள் விண்வெளியிலிருந்து பூமியைத் தாக்குகின்றன என
அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தில் நாம் வாழும்
பூமியானது மூன்றாவது கோளாகும். இதற்கடுத்து செவ்வாய், வியாழன் என்ற கோள்கள்
சூரியனைச் சுற்றி வருகின்றன. இவைகளுக்கிடையே, ஆயிரக்கணக்கான சிறு
கோள்களும், கோடிக்கணக்கான சிறு விண்கற்களும் சூரியனை அகல வட்டப்பாதையில்
சுற்றி வருகின்றன. பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய்க்கும்
வியாழனுக்கும் இடையே இருந்த கோள் வெடித்து சிதறியதனால் தோன்றியவையே இந்த
சிறு கோள்களும், விண்கற்களும், வால் நட்சத்திரங்களும் ஆகும். பெரும்பாலான
விண்கற்களின் அளவு, நாம் ஹஜ்ஜின் போது சைத்தானுக்கு எறியும் கற்களைவிட
சிறிதான கூழாங்கல் அளவிலிருந்து சிறு மண்துகள் அளவு தான். ஆனால், இவற்றின்
வேகமோ, விநாடிக்கு ஏறக்குறைய 42 கி.மீ. பூமியானது சூரியனை விநாடிக்கு
சற்றேறக்குறைய 30 கீ.மீ வேகத்தில் சுற்றுகின்றது. இந்த விண்கற்கள்
சூரியனைச் சுற்றும்போது, சற்றே பாதை விலகினால், புவியின் ஈர்ப்பு சக்தியால்
ஈர்க்கப்பட்டு பூமியின் மீது மோதுகின்றன.
இவ்வாறாக எதிரெதிர் திசையில், விண்கல்
பூமியின் மீது மோதினால் என்ன நிகழும்? விநாடிக்கு 64 கி.மீ. வேகத்தை, சிறு
மண்துகள் போன்ற விண்கல் பெற்று விட்டால், ஒரு அங்குலம் தடிமனுள்ள
இரும்புத்தகட்டையே துளைத்துச் சென்று விடும் சக்தியை பெற்று விடுவதாக
கணக்கிட்டுள்ளனர். இருப்பினும், பூமியைச் சுற்றி, காற்று மண்டலப் போர்வையை
அல்லாஹ் ஏற்படுத்தி, நம்மைக் காத்து அருள் புரிந்துள்ளான். கடுமையான
வேகத்தில், பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும் இந்த விண்கற்கள்,
காற்றில் உராய்ந்து, அதன் காரணமாக சூடாக்கப்பட்டு, உருகி எரிந்து சாம்பலாகி
காற்று மண்டலத்தோடு கலந்து விடுகின்றன. இவ்வாறாக இறைவன் காற்றுப் போர்வை
மூலம் நம்மையும், நாம் வாழும் பூமியையும் காத்தருளி உள்ளான்.
இறைவன் வழங்கிய அற்புதமான
திருக்குர்ஆனின் அறிவியல் உண்மைகளை கண்டுணர்ந்து, சிந்திக்கக்கூடிய
முஸ்லிமல்லாத மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம், சத்திய இஸ்லாத்தினை
அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இஸ்லாத்தின் பால் ஈர்க்க முடியும், இன்ஷா
அல்லாஹ்.
நன்றி-tntj.net
நன்றி-tntj.net
Subscribe to:
Posts (Atom)