,

விமானம் பறப்பது எப்படி?

airoplanஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்
பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு
A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)
B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag
ஒரு விமானம் ஒரே உயரத்தில் , நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமணாக இருக்க வேண்டும்
Weight=Lift
Drag=Thrust
த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும்
டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்
விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும்
சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,
அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.
(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)
விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்
பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது
எலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேகிருக்கும் விசிரியால் வருகிரது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும்
உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சிந்தான் , சற்று மறைமுகமாக
விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கை இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது
விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால்தான் தெரியும்
இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்குதான் விஷயம் உள்ளது
காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்)
விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?
அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது)
இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது
விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும்போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?
அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது
மனிதனால் பறக்க முடிவும் என்பது பற்றி இறைவன் திருமறையில்…
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.)
அல்குர்அன் 55-33

நன்றி-tntj.net
,

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்

முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.
இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.
குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.
பெருவெடிப்புக் கொள்கை:
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,
1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.
2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.
3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.
- என்பதாகும்.
அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.
protoncollision
(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)
சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.
படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்
படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்
பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.
இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்
படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)
1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)
ரியாதிலிருந்து ஃபைசல்

நன்றி-tntj.net
,

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?

இரத்த ஓட்டம்உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா? ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038
ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34
(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)
-கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி

நன்றி-tntj.net
,

தேன் கூடும் திருமறைக் கூற்றும்


bee-8தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம்.
இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.
கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.
பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.
ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது? தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.
மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.
இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக வீட்டுச் சுவர்களைக் கட்டும் போது, சுடப்பட்ட செங்கல்களை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மீது முகட்டைப் போட்டு விட முடியாது. அந்தச் செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகள் அடைக்கப்பட வேண்டும். செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகளை அடைப்பதற்கு சிமெண்ட் சாந்துகளைப் பயன் படுத்துகின்றோம். மனிதனுக்கு மட்டும் தான் இந்த அறிவுத் திறன் இருக்கிறதா? என்று பார்த்தால் அல்லாஹ்வின் அற்பப் படைப்பான, அதே சமயம் அற்புதப் படைப்பான இந்தத் தேனீக்கு மனிதனை விஞ்சுகின்ற அறிவுத் திறன் இருக்கின்றது.
இந்தச் சின்னஞ்சிறு தேனீ பல்வேறு மரப்பட்டைகள், மலர் அரும்புகளில் இருந்து செந்நிறத்துப் பிசினைச் சுமந்து கொண்டு வந்து தேன் கூட்டில் உள்ள கீறல்களை, இடைவெளிகளை அடைக்கின்றன. அதில் உள்ள பாந்துகளை இந்தப் பிசின் சாந்துகளை வைத்துச் சரி செய்து கொள்கின்றன.
மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீடுகளுக்கு அழகிய வண்ணம் (பெயிண்ட்) தீட்டுகின்றான் என்று எண்ணி விடக் கூடாது. அல்லாஹ்வின் இந்தச் சிறிய படைப்பும் தான் கட்டும் வீட்டிற்கு செந்நிறப் பிசினைக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்கின்றது. இதனால் அந்தத் தேன் கூட்டில் ஒரு பளபளப்பு பளிச்சிடுகின்றது.
இவ்வாறு இந்தச் சின்னஞ்சிறு அரிய படைப்பின் அடிவயிற்றுக் கிடங்கிலிருந்து கிடைக்கின்ற மெழுகின் மூலம் எழுகின்ற மெழுகு மாளிகையான தேன் கூடு, அந்தத் தேனீக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் சேர்த்தே பயன்படுகிறது.
இருட்டில் வாழும் இந்தக் குருட்டு மனிதனுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகவும், அழகு சாதனங்களுக்கும் அவனது வீட்டில் அலங்கரிக்கும் மரச் சாமான்களுக்கும் மெருகூட்டும் வண்ணக் கலவை யாகவும் அது பயனளிக்கின்றது.
மனிதன் இயற்கை வளத்தைச் சுரண்டியும், அடுத்தவரின் அல்லது அடுத்த பிராணியின் சொத்தைச் சூறையாடியும் தன் வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். ஆனால் இந்தத் தேனீயோ தன் சொந்தக் காலில் நின்று, சொந்த மூலத்தைக் கொண்டே தன் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது.
தாவர இனத்தில் போய் தேனீ சில சேர்மானங்களைப் பெறுகின்றது. அவ்வாறு தாவர வர்க்கத்திலிருந்து அந்தச் சேர்மானங்களைத் தானமாகப் பெற்றுவிடவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தத் தாவரத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மகரந்தச் சேர்க்கையைக் காணிக்கை யாகக் கொடுத்து விடுகின்றது.
சிலந்தியும் தன் சொந்தக் காலில் நின்று, தன் உடலிலிருந்து
உருவாகும் திரவத்திலிருந்து இழைகளைப் பின்னி வலையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மேலும் அது மனிதனுக்கு இடர் விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேனீயும், தேன் கூடும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வகையில் “கூடு கட்டுக” என்று தேனீயை நோக்கி அல்லாஹ் கூறும் கூற்று வெறும் கூற்றாக இல்லை. மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற, சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.
என் கூட்டைக் கட்டுவதற்காக மெழுகு எனும் மூலத்தை என்னுள் சுரக்க வைத்தவன் தன்னிகரில்லா என்னிறைவன் என்று அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு சாட்சி கூறி நிற்கின்றன, இந்தத் தேனீக்கள்!
அதிசயப் புதையல்! அதிரசப் படையல்
தேன் கூடு என்பது இன்ன பிற பொடிப் பொடி ஈக்கள், பெரும் பெரும் பறவைகள் கட்டுகின்ற கூடுகள் போன்றதல்ல! அல்லாஹ்வின் அற்புதங்களைச் சுமந்து நிற்கும் அதிசயப் புதையலாகும்; அதிரசப் படையலாகும். தேன் கூடு என்பது தேனீக்கள் வசிக்கின்ற ஒரு வீடு மட்டுமல்ல!
பூக்கள் சுரக்கின்ற இன்சுவை மதுர பானம் (சங்ஸ்ரீற்ஹழ்), மகரந்தத் தூள் ஆகியவை தேனீயின் வயிற்றில் போய் செரிமானம் ஆகி வயிற்றின் வழியாக வெளியேறும் அமிர்த பானமான தேனைக் காக்கின்ற, செயல் நுணுக்கம் தாங்கிய சேமிப்பு வங்கி தான் தேன் கூடு! பாலினச் சேர்க்கைக்குரிய பள்ளியறை! தேனீக்கள் பொறிக்கின்ற சினை முட்டைகளையும் அந்தச் சினை முட்டைகள் ஈனுகின்ற குஞ்சுகளையும் காக்கின்ற கரு என தேன் கூட்டின் பன்பமுகப் பயன்பாட்டைப் பட்டியல் போடலாம்.
தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை
மரக் கிளைக்கு இடையிடையே அந்தரத்தில் தொங்கும் இந்தத் தேன் கூடு வெறும் தேன் கூடல்ல! தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை! அமுதம் சுரக்கும் அதி மதுரத் தேன் ஆலை! இங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில், பணி நடந்து கொண்டே இருக்கின்றது.
திட்டமிடப்பட்ட தேன் கூட்டு அறைகள்
தேனீயின் பணிகளுக்குத் தக்க தேன் கூட்டில் திட்டமிடப்பட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தேன் கூட்டில் ஒரு பகுதி வளரும் ஆண் தேனீக்களுக்காகவும், தேன் மற்றும் மகரந்தத் தூளை சேமிப்பதற்காகவும் கட்டப்படுகின்றது.
ஆண் தேனீக்களுக்காகக் கட்டப்படும் அறைகள்
பணியாளர்களுக்காகக் கட்டப்படும் அறைகளை விடப் பெரிதாக அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் மூடப்பட்டு விட்டால் ஒரு குவிமாடத்தை (உர்ம்ங்) போல் காட்சி அளிக்கும். பாட்டாளித் தேனீக்களின் அறைகள் மூடப்பட்டு விட்டால் தரை மட்டமாகக் காட்சியளிக்கும்.
ஆண் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் நடுவிலும் கீழ்ப் பகுதியின் வலது புறத்திலும் கட்டப்படுகின்றன. பாட்டாளித் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் மேற்பகுதியில் இடது புறத்தில் கட்டப்படுகின்றன.
ராணித் தேனீக்களின் அறைகள்
தேன் கூட்டின் முகத்தில் நேராக, அதே சமயம் பாட்டாளித் தேனீக்களின் அறைகளுக்கு எதிராக, செங்குத்தாக ஓர் அறை தொங்கும். இது தான் ராணித் தேனீயின் அறையாகும்.
படுக்கை விட்டத்தில் அமைந்துள்ள அறைகள் பாட்டாளி அல்லது ஆண் தேனீக்களின் அறைகளாகும்.
குஞ்சுகளுக்குரிய அறை
குஞ்சுகள் அல்லது முட்டை அல்லது முட்டைப் புழுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அறையில் தான் இளம் ராணி பருவம் அடைவதற்காக வளர்க்கப்படுகின்றது. ராணித் தேனீயின் இந்த அறை சாதாரண முட்டைப் புழுக்களுக்கான அறையை விட அகலமானது.
இவ்வாறு ராணீத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்களுக்கும் இந்தத் தேன் கூட்டில் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.
மனிதன் என்ற அறிவியல் விலங்கு தான் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்ட முடியும். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, ஒப்பனை அறை என்று பல்வேறு அறைகளைக் கட்ட முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கின்றான்.
ஆனால் அந்தக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டுத் தன்னிகரற்ற முறையில் தனி பாணியில் பொறியியல் கலை நுட்பத்துடன் கூடு கட்டி, தேனீக்கள் மனிதனை, மனித அறிவை விஞ்சி நிற்கின்றன.
இதனால் தான் மனிதனின் அறிவை விஞ்சுகின்ற தேனீக்களின் இந்தத் தொழில் நுட்பக் கலையை மனிதன் கண்டறியும் வகையில் திருக்குர்ஆனில் தேனீ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தேனீக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.
இது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது. தேனீ கூடு கட்டும் விதம், அது கொண்டு வருகின்ற மகரந்தத் தூள், மொண்டு வருகின்ற தேன் மதுர இன்சுவை பானம், சிவப்பு நிறப் பிசின் போன்றவற்றைச் சேமிக்கும் பணியும் பாங்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிர்ச்சியிலும் உறைய வைக்கின்றது.
மனிதனைப் போன்று சுற்றுப் புறச் சூழலை அழித்து தனக்கு வீடு கட்டாமல், இந்தத் தேனீக்கள், தான் கட்டுகின்ற கூட்டிற்காகச் சேமித்து வரும் மகரந்தத் தூள் மூலம் தாவர இனத்தின் உருவாக்கமும், இனப் பெருக்கமும் நடைபெறுகின்றது.
தேனீக்கள் சுமந்து வருகின்ற மகரந்தத் தூள் பூக்களில் படியும் போது ஏற்படும் தாவர இனப் பெருக்கம் பற்றிய அறிவியல் ரகசிய வெளிப்பாட்டை அறியும் போது நம்முடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
-எம். ஷம்சுல்லுஹா

நன்றி-tntj.net
,

திருமணமும் நபி வழியும்!


                                                     எங்கள் இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்:                                                                                                                                   உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! (அல்குர்ஆன் 1:4,5)

ومن كل شئ خلقنا زوجين لعلكم تذكرون ( الذاريات : آية 49)


அல்லாஹ் அறிவுறுத்துகிறான்:

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக நாம் ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம். (அல்குர்ஆன் 51:49,)

மணம் முடித்து மகிழுங்கள்:

ஓ மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்: ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைத் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தத்தமது உரிமைகளைக் கேட்டுக் கொள்கிறீர்கள்) மேலும் (உங்கள்) இரத்த பந்தங்களையும் ஆதரியுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

(இது எல்லாத் திருமண (பிரசங்கம்) குத்பாவிலும் ஒதுப்படும் இறைவசனமாகும்)

உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்)களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான், மேலும் அல்லாஹ் (வாரி வழங்குவதில்) விசாலமானவன்.
 (அல்குர்ஆன் 24:32)

ரசூல் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்:

'திருமணம்' எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல் : புகாரி)

எங்களைத் திருமணம் புரியும்படி கட்டளையிட்டதுடன், திருமணம் புரியாதிருப்போரை கடுமையாக ரசூல் (ஸல்) கண்டித்தார்கள். அறிவிப்பு அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்னத் அஹமத், இப்னு ஹிப்பான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'எவருக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களுக்கும், வெட்க ஸ்தலத்திற்கும் அரணாகும். எவருக்குத் திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.' அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆதாரங்கள் : புகாரி: 1v3, முஸ்லிம்: 2v3231-35, அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா,இப்னு ஜாருத், பைஹகீ,

குறிப்பு : திருமணத்தில் மஹர்தருதல், வலீமாவிருந்து, தனது மனைவிக்குரிய உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகள், மணமகன் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.  மணமகளுக்கு இந்த வசதிகளைப் பற்றி பொறுப்பில்லை. எனவே இது மணமகனுக்கு மட்டும் கூறப்படும் நபிமொழியாகும்

நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:

'மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.' அறிவிப்பு : அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள் : திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத்.

மணமக்களின் தகுதிகள்

அல்லாஹ் வரையறுக்கின்றான்: (அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள். இணை வைக்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருந்த போதிலும், அவளைவிட இறை நம்பிக்கையுடைய (முஃமினான) ஓர் அடிமைப்பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள். அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு அவர்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும் வரை (முஃமினான பெண்களை) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள். இணைவைப்பவன் உங்களுக்கு கவர்ச்சியூட்டுபவனாக இருந்தபோதிலும், ஒரு முஃமினான அடிமை அவனை விட மேலானவன். (அல்குர்ஆன் 2:221)

'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்யமாட்டான், விபச்சாரி விபச்சாரணையோ அல்லத இணைவைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு எவரையும்) திருமணம் செய்ய மாட்டாள். இது இறை நம்பிக்கையாளர்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.' (அல்குர்ஆன் 24:3)
'பெண்களை அவர்களின் அழகுக்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம், அவர்களின் செல்வத்திற்காக மணம் முடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர்களை தடுமாறி தவற செய்துவிடலாம், அவர்களின் நல்லொழுக்கத்திற்காக மணம் முடியுங்கள். நல்லொழுக்கமுள்ள அழகற்ற அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள) அழகிய பெண்ணை
விட மேலானவள்' அறிவிப்பு: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி), ஆதாரங்கள்: இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத்.

அன்பு செலுத்தும்;, அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் (பாரம்பரிய) பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் பெருமிதம் அடைவேன் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: மஃகலு பின் யஸார் (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத்.

பெண் பார்த்து நிச்சயித்து மணம் முடியுங்கள்
நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  'நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த ரசூல் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும்,  நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள்.' ஆதாரங்கள்: நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

ஒரு நபித்தோழர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்துதான் ஒரு மதீனத்து (அன்சார்) பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! (பின் விவகாரமாகக் கூடாது) எனக் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

'ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க பேசிக் கொண்டிருக்கையில் மற்றொருவர் அப்பெண்ணை மண முடிக்க (நிச்சயம்) பேசக்கூடாது' என நபி (ஸல்) அவர்களை வலியுறுத்தினார்கள். அறிவிப்பு: அபூஹீரைரா, இப்னு அமர், உக்பா இப்னு அம்மார். ஸம்ரா பின் ஜூன்தும் (ரலி அன்ஹூம்) ஆதாரங்கள்: ஸஹீஃபா ஹம்மாம், முஅத்தா மாலிக், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னுமாஜா..

ரசூல் (ஸல்) அவர்கள் மணமுடித்த ஒரே கன்னிப் பெண்ணான ஆயிஷா (ரலி) அவர்களை அல்லாஹ் கனவில் இருமுறைக் காட்டி உங்களது மனைவியென பிரகடணப்படுத்தினான். அறிவிப்பு: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி.

குறிப்பு: நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்வில் மணமுடித்த அனைத்து மனைவிகளையும் நேரில் பார்த்து அவர்களது முழு சம்மதத்துடனே மணமுடித்தார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்களின் அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்களை நேரில் கண்டு பின் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு ஃபாத்திமா (ரலி) அவர்களை மணம் முடித்து தரும்படி அலீ (ரலி)  அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதனை ஏற்று நபி (ஸல்) அவர்களும் மணம் முடித்து வைத்தார்கள். ஆதாரம்: இப்னு ஸஃது
ஒரு திருமணம் முழுமை பெற தேவையானவைகள்

மணமகன், மணமகளின்றி

1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலீ)

2. இருநீதமுள்ள சாட்சிகள்

3. மணமகளின் முழுமையான சம்மதம்

4. மணமகளின் உரிமையான மஹர் தொகை


நபி (ஸல்) கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவளுக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.

நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி

மணப்பெண்ணின் முழு சம்மதம் தேவை

ரசூல் (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்:'அயிம்மா' (விதவை, விவாக முறிவுப் பெற்ற) பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள், பாகிரா (கன்னிப்) பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என சிலர் வினவினார்கள்.

அதற்கு ரசூல் (ஸல்);: 'அவளது மௌனமே சம்மதமாகும்' என்றார்கள்.அறிவிப்பு: ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

அல்லாஹ் அறிவுறுத்துகிறான்: 'இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.' (அல்குர்ஆன் 4:19)
நபித்தோழி கன்சா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை கிதாம் (ரலி) அவர்கள் எனது (முழு சம்மதமின்றி) எனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, மபகாரி, அபூதாவூத், நஸயீ, தாரமி,

இதற்குப் பின் கன்சா (ரலி) அவர்கள் தனது முழு சம்மத்ததுடன் நபித்தோழர் அபூலுபாமா (ரலி) அவர்களை மணமுடித்ததாக அப்துல் ரஹ்மான் பின் யஜீத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹர் கொடுத்து மணம் முடியுங்கள்

அல்லாஹ் ஆணையிடுகின்றான்: நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)

மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25)

மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்.(அல்குர்ஆன் 4:20)

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி). ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி..

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் (ஸல்) அவர்கள் 'உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்' என்றார்கள். அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி

போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி..

மஹர்-திருமணக்கொடை-மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை. ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20)
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! அறிவிப்பு: அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் (ரலி-அன்கும்), ஆதாரங்கள்: புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா.

திருமணத்தின் குறிக்கோள்

திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாக பகிர்ந்து கொள்வது இஸ்லாமிய திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள். அறிவிப்பு: உக்பா பின் ஆமிர் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ

குறிப்பு: பசிக்கு உணவு, தாகத்திற்கு நீர், உடல் தேவையான மற்றொரு துணை தேவை என்பது இயற்கையின் நீதியாகும். எனவே பசி, தாகம், மோகத்தை அடக்குவது இயற்கையின் நியதிக்கு விரோதமானதாகும். மேகத்தை அடக்கி மோட்சமடையலாமென வாதிடுவோர், அவர்களது பெற்றோர் அப்படிப்பட்ட மோட்சத்தை நாடியிருந்தால் இவர் பிறந்திருப்பாரா? என்பதை சிந்திக்கவும்.
இஸ்லாம், மோகத்தை நியாயமான (திருமண) வழியில் தீர்த்து அத்துடனே மோட்சத்தை அடைய முடியும் என்பதை கூறும் ஒரே மார்க்கமாகும். நியாயமான வழியில் தீர்க்காமல் மிருகங்களைப் போல தாறுமாறாக வாழ்வதால் இன்று எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள் உருவாகியுள்ளதை அறியலாம். இன்று எல்லோரும் உங்கள் துணைவர்ஃதுணைவியர்களிடம் உண்மையாளர்களாக இருங்கள் (Be Faithful to your Spouse) எனக் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருமணத்தின் குறிக்கோளாக இஸ்லாம் இதனை வகுத்துள்ளது.

தடுக்கப்பட்ட திருமண பந்தங்கள்

'ஷிஹார்' திருமணம்: ஒருவர் தனது மகளையோ அல்லது சகோதரியையோ மற்றொருவருக்கு மணம் பேசி அவரது மகளையோ அல்லது சகோதரியையோ தனக்கு மணம் பேசி எவ்வித திருமணக்கொடை (மஹ்ரை)யும் குறிப்பிடாமல் திருமணம் செய்வதாகும். (விளக்கம்: அபூதாவூத் எண் 2069)

நிக்காஹ் குத்பா:-

إن الحمد الله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا

ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل ومن يضلله فلآ هادئ له

وأشهد أن لآإله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله


يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا

وأنتم مسلمون ( ال عمران : آيه 102) .


يا أيها الذين آمنو اتقوا الله الذي تسائلون به والأرحام

إن الله كان عليكم رقيبا (النساء : أيه 1)


يا أيها الذين أمنو أتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم

أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله

فقد فاز فوزا عظيما ( الأحزاب : أيه 70-71 ) .

இன்னல் ஹம்த லில்லாஹி நஸ்தயீனுஹூ வநஸ்தஃ பிருஹூ வனவூது பில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, வமின் ஐஷஆதி அஃமாலி னமன்யஹ்தில்லாஹூ ஃபலாமுழில்லஹூ வமனயுழ்லில் ஃபலா ஹாதியலஹூ வ அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்;லாஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹ் யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்க துகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன், யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹல்லதீ தஸா அலூன பிஹி வர்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா: யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயஃபிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அளீமா என்று நபி (ஸல்) கற்றுத் தந்ததாக இப்னு மஸ்வூது (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் திர்மிதி, அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
குத்பாவின் பொருள் : நிச்சயமாக புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

ஈமான் கொண்ட விசுவாசிகளே இறைவனை முழுமையாக அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிமாகயன்றி மரணிக்க வேண்டாம்.
 (அல்குர்ஆன் 3:102)

ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்: அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமகுரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்: மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக் அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

ஈமான் கொண்ட விசுசாவிகளே சொல்வதை தெளிவாகவும் தீர்கமாகவும் சொல்லுங்கள். அல்லாஹ் உங்கள் வணக்கங்களை சீர்;செய்வான், உங்களது பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்ம் கட்டுபட்டு நடக்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டார்கள். (அல்குர்ஆன் 33: 70,71)


இல்வாழ்க்கை இன்பகரமானது

அல்லாஹ் அறிவிக்கின்றான்: நீங்கள் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடிகளைப் படைத்திருப்பதும்: உங்களிடையே அன்பையும், நேசத்தையும் உண்டாக்கிருப்பதும், அவனது அத்தாட்சிகளில் உள்ளனதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பற்பல) அத்தாட்சிகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21)

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்.
(அல்குர்ஆன் 2:187)

உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களை அனுபவியுங்கள்.
 (அல்குர்ஆன் 2:223)

பெண்கள் ஆண்மக்கள் பொன்னிலும், வெள்ளியிலுமான பொற்குவியல்கள்: அடையாளமிடப்பட்ட (உயர்ந்த குதிரைகள், ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகள், சாகுபடி நிலங்கள். ஆகியவற்றின் மீதுள்ள இச்சைகள் மனிதர்களுக்கு அழகாகப்பட்டுள்ளது. இவையெல்லாம் இவ்வுலக வாழ்வின் சுகப் பொருட்களாகும். அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடமிருக்கிறது.
 (அல்குர்ஆன் 3:14)

நபி (ஸல்) தெளிவாக்கினார்கள்: இவ்வுலகம் இன்பகரமானது, உலக இன்பங்களில் மிகவும் சிறப்பானது நல்ல (ஒழுக்கமான) மனைவியை அடைவதாகும். அறிவிப்பு: இப்னு உமர் (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

நற்குணமுள்ளவர்கள் இறை நம்பிக்கையில் (ஈமானில்) முழுமையானவர்கள். தனது மனைவியிடம் நல்ல முறையில் நடப்பவர்கள் உண்மையில் நற்குணமுள்ளவர்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

கணவனின் கடமைகள்

மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீர் உண்ணும்போது அவளுக்கு உணவளிப்பதும், நீர் அணியும் போது அவளையும் அணியச் செய்வதும், அவளது முகத்தில் அறையாதிருப்பதும், அவளை (தீய சொற்களால்) இழிவு படுத்தாதிருப்பதும், வீட்டில் தவிர (வெளியிடங்களில்) அவளைக் கண்டிக்காதிருப்பதும் (கணவனின் கடமை) என்று நபி (ஸல்) அறிவுறுத்தினார்கள். அறிவிப்பு: முஆவியா (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், இப்னுமாஜர், அஹ்மத்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ (உன் மனைவிக்கு) செலவு செய்த எந்த செலவுக்கும், ஏன்? உன் மனைவிக்கு அன்புடன் நீர் ஊட்டிவிட்ட உணவுக்கும் அல்லாஹ் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பு: ஸஃது இப்னு அபிவக்காஸ் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

ஒருவன் தனது குடும்பத்திற்காக செய்யும் அனைத்து செலவுகளும் அல்லாஹ்விடம் (நன்மைகளாக) கணக்கிடப்படுகிறது. அவை அவன் செய்யும் தானந் தர்மமாகிறது. அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் அல்-பத்ரி (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

ஒருவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தனது செல்வத்தை அடிமையை விடுவிப்பதற்காகவும், ஏழைகளுக்கு தர்மமாகவும், அனாதைகளுக்கு உதவியாகவும், தனது மனைவி, மக்களை செம்மையாக வைத்திருக்கவும் செலவு செய்கிறார். இவற்றில் தனது மனைவி மக்களுக்கு செலவிட்டதே அனைத்து செயல்களிலும் மேலானதாகும். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி)
ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

பெண்கள் வளைந்த எலும்பால் படைக்கப்பட்டவர்கள் அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய் அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டுவிட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், புகாரி.

ஒரு இறைநம்பிக்கையுடைய ஆண், இறைநம்பிக்கையுடைய தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால், அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்.

பெண்களை நல்லமுறையில் நடத்துங்கள், அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமை இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா.

தவறு செய்யும் மனைவியை வீட்டிலன்றி (வெளியிடங்களில் பலரறிய) கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: முஆவியத்துல் ஷீரி (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, இப்னு ஹிப்பான்.

மனைவியின் கடமைகள்

அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்' என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் நபின்றார்கள். அறிவிப்பு: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆதாரங்கள்: தப்ரானி, முஸ்னத் அஹ்மத்.

கணவன் தாம்பத்யத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், வானவர்கள் விடியும் வரை அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமழான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: முஸ்லிம், புகாரி, அபூதாவூத், தாரமி,

ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். அறிவிப்பு: உம்மு ஸல்மா (ரலி), ஆதாரங்கள்: திர்மிதி, இப்னுமாஜா


அனைவருக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கை

அல்லாஹ் கூறுகிறான்:(மனைவிகளாகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையாக இருப்பீராக! ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திடலாம். (அல்குர்ஆன் 4:19)

அழகிய அறிவுரைகள்:- அல்லாஹ் அறிவிக்கிறான் செல்வமும், பிள்ளைகளும், இவ்வுலக வாழ்வின் அலங்காரங்களாகும், என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியவை நற்கருமங்களே! உம்முடைய இறைவனிடம் நன்மை பயப்பனவாகவும் (அவனிடம்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46)

ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவி கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி

வலிமா விருந்து

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் மதினாவில் பெரும் செல்வந்தராக இருந்த அப்துர்ரஹ்மான்பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் ஒரு அன்சாரி பெண்ணை மணம் முடித்தார்கள். அத்திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. மறுநாள் காலை அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தொழுகை;கு வந்தார்கள். அவரது உடையில் மஞ்சள் நிற வாசனை பொருளின் கறை இருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் என்ன விசேஷம்? என வினவினார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்தது. தான் ஒரு மதீனத்துப் (அன்சாரிப்) பெண்ணை மணம் முடித்தேன் என பதிலளித்தார்கள்.

குறிப்பு: இந்த ஹதீஸில் வரும் 'சுஃப்ரத்' எனும் வார்த்தைக்கு 'மஞ்சள் நிறம்', 'சந்தன நிறம்' என்று மொழி பெயர்க்கப்படுகிறது. ஆயினும் இது ஒரு வாசனை பொருளின் நிறமே தவிர மளிகை பொருளான மஞ்சளோ, சந்தனமோ அல்ல என்பதும், பல நிறத்தில் இருக்கும் வாசனைப் பொருள்களைப் போல் இந்த நபித்தோழர் இங்கு மஞ்சள் நிற வாசனைப் பொருளை பயன்படுத்தி உள்ளார் என்பதை தவிர மஞ்சள் அல்லது சந்தனமோ (புனிதமானதாக) பயன்படுத்த இது ஆதாரம் அல்ல என்பதும், பொதுவாக வாசனைப் பொருட்கள் பயன்படுத்துவதையே இது குறிக்கிறது என்பதைக் கவனிக்கவும்.

ரசூல் (ஸல்) எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என வினவினார்கள். இப்னு அவஃப் (ரலி) ஒரு பேரித்தம் பழமளவு தங்கம்! என பதிலளித்தார்கள்.ரசூல் (ஸல்) ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா விருந்து வைப்பீராக என்றார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, புகாரி, முஸ்லிம், அபூதாவூத்..

கவனிக்க: சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் நபி தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை, உபதேசங்களையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்களின் கவனத்;திற்கு கொண்டு வந்தனர். ஆனால் அன்று மதீனாவில் பெறும் செல்வந்தராக திகழ்ந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என நபி (ஸல்) அவர்களும் கேட்கவில்லை. காரணம் பெரும் படோபத்துடன் பலரை அழைத்து பணத்தை விரயம் செய்து திருமணத்தை நடத்துவது இஸ்லாமிய நெறி அல்ல என நபி (ஸல்) கற்று தந்திருந்தார்கள். அதன்படி சிக்கனமாக சிறப்பாக அன்று வாழ்ந்த பெரும்செல்வந்தர் அப்துர்ரஹ்மான் பின அவ்ஃப் (ரலி) தனது திருமணத்தை முடித்தார்கள். அதனை சரி கண்ட ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டையாவது அறுத்து வலீமா (விருந்து) தர ஆணையிட்டார்கள். (ஆடம்பரமாக திருமணம் நடத்துபவர்கள் இதனை கவனிக்கவும்).

நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்:'நீங்கள் வலீமா வீருந்துக்கு அழைக்கபடுவீர்களேயானால், அவ்வழைப்பை ஏற்றுச் சிறப்பளியுங்கள்.'அறிவிப்பு: முஅத்தா மாலிக், ஆதாரம்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்: எந்த 'வலீமா' விருந்துக்கு செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் மறுக்கப்படுகிறார்களோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவர். அறிவிப்பு: அபூஹூரைரா, இப்னு அப்பாஸ் (ரலி-அன்ஹூம்) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஅக்தா மாலிகி.

நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒரு சிலவற்றிக்கு இரு முத்துக்கள் அளவுள்ள பார்லியில் தயாரிக்கப்பட்டதை வலீமா விருந்தாக கொடுத்தார்கள். (1 முத்து ' 750 கிராம் ஆகும்) அறிவிப்பவர்: ஸஃபிய்யா பின்து ஷைபா (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம்.

மணமகள் வீட்டு சீதனம்

நபி (ஸல்) அவர்களுக்கு ஜைனப், ருகையா, உம்முகுல்தும், ஃபாத்திமா (ரலி) என்ற நான்கு பெண் மக்களிருந்தனர். இவர்களில் ருகையா அவர்களை உஸ்மான் (ரலி) முதலில் மணமுடித்தர்கள். பத்ருபோரின் போது ருகையா (ரலி) அவர்கள் நோயால் இறந்து விடவே, நபி (ஸல்) அவர்களது தனது அடுத்த மகளான உம்முகுல்தும் (ரலி) அவர்களை மணமுடித்து வைத்தார்கள். இவ்விரு திருமணங்களிலும் செல்வந்தரான உஸ்மான் (ரலி) அவர்களை மருமகனாகப் பெற்ற நபி (ஸல்) அவர்கள் எந்த சீர்வரிசைகளையும், சீதனங்களையும் தனது
மக்களுடன் மாப்பிள்ளை உஸ்மான் (ரலி) அவர்களின் வீட்டுக்கு அனுப்பியதாக, அதிகாரபூர்வமாக ஆதாரங்களைப் பார்க்க முடியவில்லை.

குறிப்பு: ஆனால் சீர்வரிசைகள் வரதட்சனை வாங்க இஸ்லாத்தில் அறவே இடமில்லை.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)

بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .

நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது

... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...

பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக! என்று கூறுவார்களென அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

(பரகத்) என்னும் அரபி சொல்லுக்கு 'புலனுக்கெட்டாத இறை அருள்' என்பது பொருள்.

குறிப்பு: மேற்கண்ட இந்த துவாவை நாம் அனைவரும் மணமக்களுக்காக ஒதுவது தான் நபிவழி. சுன்னத் அதற்கு மாறாக, நாம் வேறுவிதத்தில் வாழ்த்துவது, மேற்கண்ட துவாவை புறக்கணிப்பதுடன் ஒரு நபி வழியை ஒரு சுன்னத்தையும் புறக்கணித்துவிடும் விதமாக, நம்மை ஒரு நூதனத்தை நடைமுறை படுத்தியவராக்கி விடும் என்பதை கவனிக்கவும்.

முஹம்மது நபி (ஸல்) கூறியுள்ளார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை (குர்ஆன்) நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை (சுன்னத்) காரியங்களில் கெட்டது பித்அத்துக்கள் (இஸ்லாம் மார்கத்தில் நபிவழிக்கு மாற்றமாக சேர்க்கப்பட்ட அதிகமாக்கப்பட்ட புதுமையானவைகள்) பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளே, வழிகேடுகள் நரகத்தில் (கொண்டு) சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம்: புகாரி.

குறிப்பு: ஆதலால் நாம் மேற்படி துவாவை ஒதி நபி வழிபடி செயல்படுவது நம்மை நரகத்திலிருந்து காக்கும் ஒரு சிலரிடம் மட்டும் நடைமுறையில் உள்ள ஸஅல்லிஃப் பைனஹூமா போன்ற துவாவை ஒதுவது அதற்கு நபி (ஸல்) கூறாத விதத்தில் ஆமீன், ஆமீன் என்று முழுங்குவதைனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த துவா ஒதும் போது அலி, ஃபாத்திமா என்ற பெயர், வரும்போது பெண்ணுக்கு பெண்ணுடைய உறவினர் (தாலி)கருகமணி கட்டுவது போன்றவை ஆதாரமற்ற மூட நம்பிக்கையாகும். அதை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தமது நபித்துவத்தில் நிக்காஹ்விலோ, நிக்காஹாவிற்கு பிறகோ தன் மனைவிகளுக்கோ அல்லது தன் மகள் ஃபாத்திமாவுக்கோ (தாலி) கருகமணி கட்டவே இல்லை என்பதும், (தாலி) கருகமணி கட்டுவது அதை கணவன் இறந்த பின் அறுப்பது பின் அந்த பெண்ணை விதவை கோலத்தில் வைத்து அபசகுணமாக கருதி
ஒதுக்கி வைப்பது இவையாவும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவை. இவை பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.

சீறா புராணத்தை இயற்றிய உமர் புலவர் நபி (ஸல்) அவர்களுக்கும் சுமார் ஆயிரம் வருடத்திற்குப் பின்னர் பிறந்துள்ளவர். தனது கற்பனையினால் சில கவிதைகளை இயற்றி அதில் இப்படி அலி (ரலி), ஃபாத்திமா (ரலி) திருமணத்தைக் கற்பனையாகப் பாடியுள்ளார். இதை செயல்படுத்தும் நமது தமிழ் உறுது முஸ்லிம் மக்கள் நபிவழியை சுன்னத்தை செயல்படுத்தவில்லை என்பதை அறியலாம். ஆகையால் நாம் நபி வழியை கடைபிடித்தால் இம்மையில், மறுமையில் வெற்றி பெறுவோம்.

மணமக்களின் பிரார்த்தனை (துஆ)


لئن أتيتنا صالحا لنكو نن من الشاكرين ( الأعراف : أيه 189 ) .


'லயின் அதய்தனா ஸாலிஹன் லநகூனன்ன மினஷ் ஷாகிரீன்' (7:189)

எங்களிறைவா! எங்களிருவருக்கும் நீ நல்லதை (சந்ததியை) கொடுத்தால் நிச்சயமாக நாங்களிருவரும் நன்றியுடையவர்களாக இருப்போம். (அல்குர்ஆன் 7:189)

(ஆதிமனிதர் ஆதம் (அலை) அவரது துணைவியார் ஹவ்வா (அலை) அவர்களுடன் கேட்ட பிரார்த்தனை)


رب هب لى من لدنك ذرية طيبة إنك

أنت السميع الدعاء ( ال عمران : آيه 38 ) .


'ரப்பீஹப்லி மின்லதுன்க துர்ரியய்யதன் தைய்யிபதன் இன்னக்க சமிஉத்துஆ'

இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளைச் செவிமடுப்பவன்.(அல்குர்ஆன் 3:38)

(ஜக்கரிய்யா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

மணமகனின் பிரார்த்தனை (துஆ)


ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين

واجعلنا للمتقين إماما ( الفرقان : آيه 74 ) .


'ரப்பனா ஹப்லலனா மின் அஜ்வாஜினா வ துர்ரிய்யாதினா குர்ரத்த அயுனின் வ ஜஅல்னா லில் முத்தகீன இமாமா'

எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக.
 (அல்குர்ஆன் 25:74)

(ரஹ்மானின் நல்லடியார்கள் கேட்கும் பிரார்த்தனைகளில் ஒன்று பார்க்க 25:67 முதல் 75 வசனங்கள்)

ஒரு பெண்ணை மணமுடித்ததும் அவளது முன்னெற்றி ரோமத்தை பிடித்திக் கொண்டு மணமகன்:

اللهم إني أسألك خيرها وخير ما جبلت عليه

وأعوذ بك من شرها وشر ما جبلت عليه .


'அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக ஹைரஹா வஹைர மா ஜபல்த்த அலைஹி வ அவூது பிக மின் ஷர்ரிஹா வஷர்ரி மாஜபல்த்த அலைஹி' என்று பரகத்துக்காக துஆ செய்ய வேண்டும்.

பொருள்: இறைவா! இப்பெண்ணிடமிருந்து (எனக்கு) நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், இப்பெண்ணின் இயல்புகளிலிருந்து எனக்கு நன்மையானவை கிடைக்க வேண்டுமென்றும், உன்னிடம் வேண்டுகிறேன். மேலும் இப்பெண்ணிடமிருந்து தீங்குகள் ஏற்படாமலிருக்கவும் உன்னிடம் வேண்டுகிறேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர்பின் ஆஸ் (ரலி) ஆதாரம்: ஹாகிம்

இல்லறத்தின் ஒழுங்குகள்

ஒருவர்தம் மனைவியுடன் கூடும்போது


بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان مارزقتنا


'பிஸ்மில்லாஹி அல்லாஹூம்ம ஜன்னிப்னஷ் ஷைதான வஜன்னிப்ஷ்ஷைதான மா ரஸக்தனா' என்று கூறுவாரானால் - அப்போது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஷைத்தானால் எந்த தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

பொருள்: இறைவா! எங்களையும் எங்களுக்கு நீ வழங்கக்கூடிய குழந்தைகளையும் ஷைத்தானை விட்டும் நீ பாதுகாப்பாயாக! ஆதாரங்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா, புகாரி, முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால், தொழுகைக்குச் செய்வதுபோல் ஒளு செய்து கொள்வார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம்.

தன் மனைவியுடன் கூடிவிட்டு அவளது அந்தரங்கத்தை வெளியில் சொல்லித் திரிபவன் கியாமத் நாளில் அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவனாவான் என நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), ஆதாரங்கள்: முஸ்லிம், அஹ்மத்

திருமண அநாச்சாரங்களை விட்டொழிப்போம்

1. மணமக்களை பூமாலை மலர்களால் அலங்கரித்து அழைத்து வரல்.

2. திருமணத்திற்கு முந்திய நாளிரவு மணமக்களுக்கு ரசம் (நலங்கிடல்) என்ற பெயரில் எண்ணெய் சடங்கு செய்தல்.

3. கைக்கூலி எனும் வரதட்சணை வாங்குதல்.

4. மாலை மாற்றுதல், வெற்றிலை மாற்றுதல், அரிசி அளத்தல், பல்லாங்குழி விளையாடல் போன்றவை.

5. மணமேடைக்கு மணமகன் வருகையில் ஆரத்தி எடுத்தல், ஆட்டுத்தலை, கோழி போன்றவற்றை தலை சுற்றி எறிதல்.

6. மணமகனுக்கு பெண் வீட்டார் நிறைகுட தண்ணீர்வைத்து அதில் அவரின் காலை கழுவி விடல்.

7. மணமகனுக்கு தங்க மோதிரம், மைனர் செயின் அணிவித்தல்.

8. மணமகளுக்கு தாலி மற்றும் கருகமணி கட்டுதல்.

9. மணமக்களை வைத்து மஞ்சள் பூசி நலங்கு பாடுதல்.

10. நல்லநேரம், சகுணம் பார்ப்பது, சடங்குகளின் பெயர்களால் வரம்புமீறி, ஆண், பெண் (திரை) ஹிஜாபின்றி இஸ்லாம் அனுமதிக்காத விதத்தில் விளையாடி மகிழ்வது.

11. மேடை அலங்காரம், வீடியோ, மேளவாத்தியம் என்று அனாச்சாரமாக பணத்தை செலவழிப்பது.

12. பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின்பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயரில் பொருட்களை கேட்டு வாங்குவது.

13. சுன்னத்தான தாடியை முகச்சவரம் என்ற பெயரில் வழித்தல்.

14. திருமணதன்று பெண் வீட்டாரிடம் விருந்து கொடுக்க நிர்பந்திப்பது.

15. மணமகனை பைத்ப்பாடி ஊர்வலமாக அழைத்து செல்வது.

16. மணமக்களை தர்ஹாகளுக்கு அழைத்து செல்வது.


மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பிரதாயங்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனென்றால்:

நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள், எவர்கள் மற்றொரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களே அவர்கள், அந்த சமுதாயத்தில் சேர்ந்தவராவர்கள். என்னைச் சார்ந்தவர்களல்ல. அறிவிப்பு: இப்து உமர் (ரலி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, அஹ்மத்.

குறிப்பு: இங்கு கருணை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மற்ற சமுதாய கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள் என்று கூறுவது எந்த ஒரு சமுதாயத்தின் மீது உள்ள குரோதமோ, வெறுப்பினாலோ அல்ல என்பதையும், அப்படி செய்வது மனித யூகங்கள் கலந்த, இறைவனின் முழு அங்கீகாரம் அல்லாத ஒரு கலாச்சார செயலாக இருக்குமே அல்லாமல், இறைவனால் அளிக்கப்பட்ட எளிமையான, சீரான, ஒழுக்கமான ஒரு மார்க்கத்தின் கலாச்சாரமாக இருக்காத காரணத்தினால் இறை வெறுப்பும், தண்டைனையும் பெற வைக்கும் என்பதனாலேயே என்பதை உணரவும் மனித குலத்திற்கு அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் இறைவன் மனிதர்களிடம் எதை விரும்புகிறானோ அதைத் காட்டி தரவே முஹம்மது (ஸல்) மூலம் அல்லாஹ் அவ்வாறு கூற வைத்துள்ளான் என்பதும் ஒரு காரணமாகலாம். 
,

இட ஒதுகீடு என்பது முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!?

ஒப்பற்ற ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.  
சென்னை ஓட்டேரி தாஷா மஹான் பகுதியில் என் மாமா மளிகை கடை வைத்திருந்தார். அவர் கடையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் பாபர் மசூதி காவிபயங்கரவாதிகளால் உடைக்கப் பட்டு நீதி மறுக்கப் பட்டு கொண்டிருந்ததை கண்டித்து தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றே கழகம் சார்ப்பில் டிசம்பர் ஆறு போரட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு கண்டணம் செய்யவும் நீதி வேண்டி போரடவும் மக்களை அழைக்க ஒரு வெள்ளிக் கிழமை ஜும்மா முடிந்த பின்னர் பள்ளிவாசல் வெழியே மக்களுக்கு பொரட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு நோட்டிஸ் கொடுத்து கொண்டிருந்தேன். சிலர் அதை ஆச்சரியத்துடன் பார்த்தனர் சிலர் இது போன்று நோட்டிஸ் இந்த முஹல்லாவில் கொடுக்கக் கூடாது என்று கண்டித்தனர் அந்த ஏரியாவில் இருக்கும் பிரபல டாக்டர் என்னிடம் கூறினார் தம்பி இது எல்லாம் வீண் வேலை என்றார். அவரின் முகவரியை தாருங்கள் இது ஒரு வீண் வேலையா இல்லையா என்பதை உங்களுக்கு நான் விளகப்படுத்துகிறேன் என்று கூறி அனுமதி வாங்கினேன். அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு. அவரிடம் கேட்டேன் நீங்கள் இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தை வாசித்து இருக்கிறீர்களா என்றேன் வாசித்துள்ளேன் என்றார். அதன் முன்னுரையில் உள்ள உறுதி மொழியை கொஞ்சம் சொல்லுங்கள் என்றேன். முன்னர் ஒரு காலத்தில் படித்தது ஞாபகம் இல்லை நீங்களே சொல்லுங்கள் என்றார். அதன் முன்னுரையில் இந்திய குடிமக்களாகிய நாங்கள் எங்களுக்கு நாங்களே ஒரு சட்டத்தை இயற்றிக் கொண்டு அதன்படி வாழ்வோம் என்று உறுதி கூறுகிறோம் என்று ஒரு உறுதி மொழி இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களிடமும் பெறப்பட்டு இருக்கும். இது இந்த நாட்டில் பிறந்த அனைவருக்குமான ஒரு பொதுவான உறுதி மொழி. மேலும் அதன் இரண்டவது வழிகாட்டளில் 1947 முன்பு அதவது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்த நாட்டில் ஒரு சொத்து யாருடையதாக உள்ளதோ அது சுதந்திரத்திற்கு பின்னும் அவரே அதன் உரிமையாளர் என்று ஒரு வழி காட்டல் உள்ளது. அதன் அடிப்படையில் பாபர் மஸ்ஜித் சுதந்திரத்திற்கு முன் அது எங்கள் வழிபாட்டுத்தளம் சுதந்திரத்திற்கு பின்பும் அது எங்கள் வழிபாட்டுத்தளம். இது எங்கள் உரிமை மட்டும் இல்லை இந்தியா அரசியல் சட்டத்தின் உரிமை இதை கட்டிக்காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்றேன். உங்களை போன்ற படித்தவர்கள் செய்ய வேண்டி காரியம் இது என்றேன் ஆனால் நீங்கள் உங்களுக்கு என்று ஒரு விசிடிங்க் கார்டை உருவாக்கி விட்டு பின்னர் இந்த சமுகத்தை மறந்து விடுகிறீர்கள் என்றேன். அவர் மெளனமாக இருந்தார். இங்கு ஒரு விசயத்தை ஒப்பு நோக்குங்கள் இந்தியாவின் தேச தந்தை அண்ணல் மகாத்மா காந்தியை சுட்டுக் கொள்ள சதித்திட்டம் தீட்டியதில் முக்கிய பங்காற்றிய. சவார்கர் என்பவருக்கு பாரதிய ஜனதா ஆட்ச்சியில் இருந்த போது வீர சவார்கர் விருதை வழங்கி அவரின் பெயரை அந்தமான் விமாண நிலையத்திற்க்கு சூட்டியது. இந்த நாட்டில் ஒன்றுமைக்கும் இறையான்மைக்கும் ஊறுவிளைவித்தவர்கள் எல்லாம் ஏதோ இந்த நாட்டுக்கு தன்னுயிரை அர்ப்பனம் செய்தவர்களை போல் பொய்யான ஒரு தோற்றம் இங்கு வரலாறு ரீதியாக உருவாக்கப் படுகிறது. அரசியல் அதிகார வர்க்கம் என்பது என்னவோ ஐந்து வருடம்தான் அதற்க்குள் வரலாறுகள் திருத்தப்படவும் ஆதரங்கள் திருடப்படவும் போதுமானதாக இருக்கிறது திருடர்களுக்கு. இந்த அதிகாரத் திருட்டை ஒளிக்க நம்மிடம் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் இல்லாதது ஒரு குறையே  இங்கு பேரசிரியர் அ. மார்க்ஸ் அவர்களையும் அவர் போன்று இஸ்லாமியர்கள் மீது கரிசணம் கொண்டவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் சமுயத்து தலைவர்களும் நாங்களும் தூங்கி கொண்டிருந்த போது நீங்கள் எல்லாம்! இந்த சமுகத்திற்கு விழித்திருந்து வரலாறு திரிபுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா. முஸ்லிம்களுக்கு இட ஒதுகீடு ஒன்றே அவர்களின் தியாகத்தை திருடி திருத்தியதை  திரித்ததை சரி செய்ய முடியும். இங்கு யார் தலைமையில் இட ஒதுகீடுகான போரட்டம் என்பது அல்ல பிரச்சனை அதை இஸ்லாமியர்கள் உணரவேண்டும் உணர்வார்கள். இட ஒதுக்கீடு வேண்டி கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்திய பேரணிக்கு எனது ஊரில் அழைப்பு வைத்துக் கொண்டிருந்தேன் எப்படி நீ எங்கள் ஊரில் அந்த ஜாம அத் நடத்தும் பேரணிக்கு அழைக்கலாம் என்று கூறி ஒரு சகோதரர் என்னை அடிக்க வந்தார்!. அல்லாஹ்வின் பேறுதவியால் 3 ½ சத வீதம் இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. என்னை அடிக்க வந்த சகோவின் மகன் M.PA. படிக்க முடிவு செய்து அதர்க்காண முயற்ச்சியில் இறங்கி தனியார் பள்ளி ஒன்றில் சீட் கேட்டு இருக்கிறார் அவர்கள் 1 ½ லட்சம் வரை தேவை படும் என்று கூறியுள்ளனர். அங்கு வந்த மாற்று மத சகோ ஒருவர் உங்களுக்கு இட ஒதுகீடு உள்ளது அதனால் அரசு கல்லுரியில் முயற்ச்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார் அதன் முடிவில் அரசு கல்லுரி ஒன்றி அவரை படிக்க வைத்திருக்கிறார். பின்னொரு நாள் அடிக்க வந்த சகோ என்னை சந்தித்து உங்கள் நம்பிக்கை வீண் போக வில்லை என் பையனுக்கு இட ஒதுகீட்டில் சீட்டு கிடைத்து விட்டது என்றார். நான் இது ஒட்டுமொத்தமான சமுதாயம் போராடியதின் வெற்றி சகோ என்றேன். கொடுத்த கொஞ்சம் இட ஒதுக்கீட்டையும் சரியாக தரவில்லையா அதற்க்காகவும் போராடலாம் தப்பு இல்லை. நாடர் சமுதாயதிற்கு என்று ஒரு போங்க். மெர்க்கண்டல் வங்கி இது கடனில் மூழ்கி அந்த வங்கி அவர்களின் கையை விட்டுச் சென்று விடும் நிலை ஏற்பட்ட போது ஒட்டு மொத்த நாடர் சமுகமும் அதை மீட்கும் முயற்ச்சியில் இறங்கி மீட்டது!. சாலை விபத்தில் எனக்கு காலில் அடிபட்டு காரைக்குடியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றேன் அவர் என்னை பரிசோதித்து விட்டு ஒரு லட்டசம் மருத்துவத்திற்க்கு சிலவாகும் ஒரு முப்பது ஆயிரத்தை நீங்கள் புரட்டுங்கள் மீதி பணத்தை கலைஞர் காப்பிட்டுத்திட்டத்தில் புரட்டி கொள்ளலாம் என்றார் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறிவிட்டு வெளியில் வந்து விட்டேன். ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் வேறுயாரவது குறைந்த செலவில் மருத்துவம் செய்யக் கூடிய மருத்துவர்கள் இருகிறார்களா என்றேம். அவர் கூறினார் புதுகோட்டை செல்லுங்கள் அங்கு ஒரு மருத்துவர் குறைந்த செலவில் மருத்தும் பார்க்கலாம் என்றார். அங்கு சென்று அவர் குறிப்பிட்ட மருத்துவரிடம் காட்டினேன் சில மாத்திரைகளையும் சில ஊசிகளையும் தந்து விட்டு ஒரு தயிலத்தை பரிந்துரைத்தார். அவரிடம் எலும்பு எதவது உடைந்து இருந்தால் என்ன செய்வது அதனால் எக்ரே எடுத்து விடலாமே என்றேன். வேண்டாம் எலும்பு உடைந்திருந்தால் உங்களால் நடந்தே வந்திருக்க முடியாது என்று கூறினார். அவருக்கு ஏகத்துவம் குறித்தும் மறுமையில் அவர் செயல்களுக்கு பெரிய பரிசு காத்திருப்பதையும் சுட்டிகாட்டி அவர் ஏகத்துவ கொள்கையை அவரும் பற்றிப்பிடிக்க படைத்தவனிடம் துவா செய்து விட்டு வந்தேன். தமிழகத்தில் பல வருடங்களுக்கும் முன் இரண்டு தரப்பினர்களுக்கு சண்டை ஏற்பட்டு இரண்டு தரப்பிலும் உயிர் சேதம் ஆன நிலையில் கலவரத்தில் ஈடுபட்டல் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு சென்று விட்டு வருபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தர போட்ட அதிகாரியை அலட்சியம் செய்து விட்டார் ஒரு அதிகாரி. அவர்கள் மீது ஏன் துப்பாகி சூடு நடத்த வில்லை என்று அதிகாரியை கேட்ட போது அவர்கள் கலவரத்தில் ஈடுபட வரவில்லை ஜும்மா தொழுது விட்டு வந்தவர்கள் அதனால் சுடவில்லை. ஆனால் என் கடமை அவர்களை சுட சொன்னது அதையும் விட மேலாக என் உள்ளுணர்வு அவர்களை சுடதே என்றது அதனால் என் உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து நான் சுட வில்லை என்றார் கடமையை மீறிய காரணத்திற்க்காக அவர் சஸ்பண்ட் செய்யப்பட்டார். இங்கு ஒரு விசயத்தை ஒப்பு நோக்குங்கள். மறைந்த முன்னால் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி படுபயங்கரமான முறையில் அவர் பாதுகாப்புப் படை வீரண் ஒருவனாலேயே சுட்டுக் கொள்ளப்பட்டதும் இண வெறியின் அடையாளமே. யார் தலைமையில் இட ஒதுகீடு போரட்டம் என்பதல்ல இங்கு கேள்வி எங்களுக்கு இட ஒதுகீடு வேண்டும் என்பதே கோரிக்கை. இங்கு அமைப்பு ரீதியாக செயல் படும் சகோக்கள் கவணிக்க வேண்டு உங்கள் பிற கூட்டங்களுக்கு இல்லாத ஆதரவு இட ஒதுகீடு போரட்டம் ஆர்ப்பாட்டங்களு மக்கள் தரும் ஆதரவை உற்று நோக்குங்கள் எங்கள் மக்களின் ஏக்கம் புரியும். உண்ணால்தான் என்னால்தான் என்னும் பேச்சை முடித்துக் கொள்ளுங்கள் நம்மால் நம் வாழ்வுரிமையை மீட்க முடியும் என்று நம்புங்கள் மக்களை திரட்டுங்கள். நன்றி: kaleelsms.com/
                                                                          இட ஒதுகீட்டுக்காண ஆவணப் படம் நன்றி ஆளூர் ஷாநவாஸ்

இட ஒதுகீடு என்பது முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!?

ஒப்பற்ற ஓரிறையின் சாந்தியும் சமதானமும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம் மீது நின்று நிலவட்டுமாக.  
சென்னை ஓட்டேரி தாஷா மஹான் பகுதியில் என் மாமா மளிகை கடை வைத்திருந்தார். அவர் கடையில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் பாபர் மசூதி காவிபயங்கரவாதிகளால் உடைக்கப் பட்டு நீதி மறுக்கப் பட்டு கொண்டிருந்ததை கண்டித்து தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றே கழகம் சார்ப்பில் டிசம்பர் ஆறு போரட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு கண்டணம் செய்யவும் நீதி வேண்டி போரடவும் மக்களை அழைக்க ஒரு வெள்ளிக் கிழமை ஜும்மா முடிந்த பின்னர் பள்ளிவாசல் வெழியே மக்களுக்கு பொரட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு நோட்டிஸ் கொடுத்து கொண்டிருந்தேன். சிலர் அதை ஆச்சரியத்துடன் பார்த்தனர் சிலர் இது போன்று நோட்டிஸ் இந்த முஹல்லாவில் கொடுக்கக் கூடாது என்று கண்டித்தனர் அந்த ஏரியாவில் இருக்கும் பிரபல டாக்டர் என்னிடம் கூறினார் தம்பி இது எல்லாம் வீண் வேலை என்றார். அவரின் முகவரியை தாருங்கள் இது ஒரு வீண் வேலையா இல்லையா என்பதை உங்களுக்கு நான் விளகப்படுத்துகிறேன் என்று கூறி அனுமதி வாங்கினேன். அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு. அவரிடம் கேட்டேன் நீங்கள் இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்தை வாசித்து இருக்கிறீர்களா என்றேன் வாசித்துள்ளேன் என்றார். அதன் முன்னுரையில் உள்ள உறுதி மொழியை கொஞ்சம் சொல்லுங்கள் என்றேன். முன்னர் ஒரு காலத்தில் படித்தது ஞாபகம் இல்லை நீங்களே சொல்லுங்கள் என்றார். அதன் முன்னுரையில் இந்திய குடிமக்களாகிய நாங்கள் எங்களுக்கு நாங்களே ஒரு சட்டத்தை இயற்றிக் கொண்டு அதன்படி வாழ்வோம் என்று உறுதி கூறுகிறோம் என்று ஒரு உறுதி மொழி இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களிடமும் பெறப்பட்டு இருக்கும். இது இந்த நாட்டில் பிறந்த அனைவருக்குமான ஒரு பொதுவான உறுதி மொழி. மேலும் அதன் இரண்டவது வழிகாட்டளில் 1947 முன்பு அதவது இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்த நாட்டில் ஒரு சொத்து யாருடையதாக உள்ளதோ அது சுதந்திரத்திற்கு பின்னும் அவரே அதன் உரிமையாளர் என்று ஒரு வழி காட்டல் உள்ளது. அதன் அடிப்படையில் பாபர் மஸ்ஜித் சுதந்திரத்திற்கு முன் அது எங்கள் வழிபாட்டுத்தளம் சுதந்திரத்திற்கு பின்பும் அது எங்கள் வழிபாட்டுத்தளம். இது எங்கள் உரிமை மட்டும் இல்லை இந்தியா அரசியல் சட்டத்தின் உரிமை இதை கட்டிக்காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்றேன். உங்களை போன்ற படித்தவர்கள் செய்ய வேண்டி காரியம் இது என்றேன் ஆனால் நீங்கள் உங்களுக்கு என்று ஒரு விசிடிங்க் கார்டை உருவாக்கி விட்டு பின்னர் இந்த சமுகத்தை மறந்து விடுகிறீர்கள் என்றேன். அவர் மெளனமாக இருந்தார். இங்கு ஒரு விசயத்தை ஒப்பு நோக்குங்கள் இந்தியாவின் தேச தந்தை அண்ணல் மகாத்மா காந்தியை சுட்டுக் கொள்ள சதித்திட்டம் தீட்டியதில் முக்கிய பங்காற்றிய. சவார்கர் என்பவருக்கு பாரதிய ஜனதா ஆட்ச்சியில் இருந்த போது வீர சவார்கர் விருதை வழங்கி அவரின் பெயரை அந்தமான் விமாண நிலையத்திற்க்கு சூட்டியது. இந்த நாட்டில் ஒன்றுமைக்கும் இறையான்மைக்கும் ஊறுவிளைவித்தவர்கள் எல்லாம் ஏதோ இந்த நாட்டுக்கு தன்னுயிரை அர்ப்பனம் செய்தவர்களை போல் பொய்யான ஒரு தோற்றம் இங்கு வரலாறு ரீதியாக உருவாக்கப் படுகிறது. அரசியல் அதிகார வர்க்கம் என்பது என்னவோ ஐந்து வருடம்தான் அதற்க்குள் வரலாறுகள் திருத்தப்படவும் ஆதரங்கள் திருடப்படவும் போதுமானதாக இருக்கிறது திருடர்களுக்கு. இந்த அதிகாரத் திருட்டை ஒளிக்க நம்மிடம் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் இல்லாதது ஒரு குறையே  இங்கு பேரசிரியர் அ. மார்க்ஸ் அவர்களையும் அவர் போன்று இஸ்லாமியர்கள் மீது கரிசணம் கொண்டவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் சமுயத்து தலைவர்களும் நாங்களும் தூங்கி கொண்டிருந்த போது நீங்கள் எல்லாம்! இந்த சமுகத்திற்கு விழித்திருந்து வரலாறு திரிபுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா. முஸ்லிம்களுக்கு இட ஒதுகீடு ஒன்றே அவர்களின் தியாகத்தை திருடி திருத்தியதை  திரித்ததை சரி செய்ய முடியும். இங்கு யார் தலைமையில் இட ஒதுகீடுகான போரட்டம் என்பது அல்ல பிரச்சனை அதை இஸ்லாமியர்கள் உணரவேண்டும் உணர்வார்கள். இட ஒதுக்கீடு வேண்டி கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்திய பேரணிக்கு எனது ஊரில் அழைப்பு வைத்துக் கொண்டிருந்தேன் எப்படி நீ எங்கள் ஊரில் அந்த ஜாம அத் நடத்தும் பேரணிக்கு அழைக்கலாம் என்று கூறி ஒரு சகோதரர் என்னை அடிக்க வந்தார்!. அல்லாஹ்வின் பேறுதவியால் 3 ½ சத வீதம் இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. என்னை அடிக்க வந்த சகோவின் மகன் M.PA. படிக்க முடிவு செய்து அதர்க்காண முயற்ச்சியில் இறங்கி தனியார் பள்ளி ஒன்றில் சீட் கேட்டு இருக்கிறார் அவர்கள் 1 ½ லட்சம் வரை தேவை படும் என்று கூறியுள்ளனர். அங்கு வந்த மாற்று மத சகோ ஒருவர் உங்களுக்கு இட ஒதுகீடு உள்ளது அதனால் அரசு கல்லுரியில் முயற்ச்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார் அதன் முடிவில் அரசு கல்லுரி ஒன்றி அவரை படிக்க வைத்திருக்கிறார். பின்னொரு நாள் அடிக்க வந்த சகோ என்னை சந்தித்து உங்கள் நம்பிக்கை வீண் போக வில்லை என் பையனுக்கு இட ஒதுகீட்டில் சீட்டு கிடைத்து விட்டது என்றார். நான் இது ஒட்டுமொத்தமான சமுதாயம் போராடியதின் வெற்றி சகோ என்றேன். கொடுத்த கொஞ்சம் இட ஒதுக்கீட்டையும் சரியாக தரவில்லையா அதற்க்காகவும் போராடலாம் தப்பு இல்லை. நாடர் சமுதாயதிற்கு என்று ஒரு போங்க். மெர்க்கண்டல் வங்கி இது கடனில் மூழ்கி அந்த வங்கி அவர்களின் கையை விட்டுச் சென்று விடும் நிலை ஏற்பட்ட போது ஒட்டு மொத்த நாடர் சமுகமும் அதை மீட்கும் முயற்ச்சியில் இறங்கி மீட்டது!. சாலை விபத்தில் எனக்கு காலில் அடிபட்டு காரைக்குடியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்றேன் அவர் என்னை பரிசோதித்து விட்டு ஒரு லட்டசம் மருத்துவத்திற்க்கு சிலவாகும் ஒரு முப்பது ஆயிரத்தை நீங்கள் புரட்டுங்கள் மீதி பணத்தை கலைஞர் காப்பிட்டுத்திட்டத்தில் புரட்டி கொள்ளலாம் என்றார் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறிவிட்டு வெளியில் வந்து விட்டேன். ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் வேறுயாரவது குறைந்த செலவில் மருத்துவம் செய்யக் கூடிய மருத்துவர்கள் இருகிறார்களா என்றேம். அவர் கூறினார் புதுகோட்டை செல்லுங்கள் அங்கு ஒரு மருத்துவர் குறைந்த செலவில் மருத்தும் பார்க்கலாம் என்றார். அங்கு சென்று அவர் குறிப்பிட்ட மருத்துவரிடம் காட்டினேன் சில மாத்திரைகளையும் சில ஊசிகளையும் தந்து விட்டு ஒரு தயிலத்தை பரிந்துரைத்தார். அவரிடம் எலும்பு எதவது உடைந்து இருந்தால் என்ன செய்வது அதனால் எக்ரே எடுத்து விடலாமே என்றேன். வேண்டாம் எலும்பு உடைந்திருந்தால் உங்களால் நடந்தே வந்திருக்க முடியாது என்று கூறினார். அவருக்கு ஏகத்துவம் குறித்தும் மறுமையில் அவர் செயல்களுக்கு பெரிய பரிசு காத்திருப்பதையும் சுட்டிகாட்டி அவர் ஏகத்துவ கொள்கையை அவரும் பற்றிப்பிடிக்க படைத்தவனிடம் துவா செய்து விட்டு வந்தேன். தமிழகத்தில் பல வருடங்களுக்கும் முன் இரண்டு தரப்பினர்களுக்கு சண்டை ஏற்பட்டு இரண்டு தரப்பிலும் உயிர் சேதம் ஆன நிலையில் கலவரத்தில் ஈடுபட்டல் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு சென்று விட்டு வருபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தர போட்ட அதிகாரியை அலட்சியம் செய்து விட்டார் ஒரு அதிகாரி. அவர்கள் மீது ஏன் துப்பாகி சூடு நடத்த வில்லை என்று அதிகாரியை கேட்ட போது அவர்கள் கலவரத்தில் ஈடுபட வரவில்லை ஜும்மா தொழுது விட்டு வந்தவர்கள் அதனால் சுடவில்லை. ஆனால் என் கடமை அவர்களை சுட சொன்னது அதையும் விட மேலாக என் உள்ளுணர்வு அவர்களை சுடதே என்றது அதனால் என் உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து நான் சுட வில்லை என்றார் கடமையை மீறிய காரணத்திற்க்காக அவர் சஸ்பண்ட் செய்யப்பட்டார். இங்கு ஒரு விசயத்தை ஒப்பு நோக்குங்கள். மறைந்த முன்னால் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி படுபயங்கரமான முறையில் அவர் பாதுகாப்புப் படை வீரண் ஒருவனாலேயே சுட்டுக் கொள்ளப்பட்டதும் இண வெறியின் அடையாளமே. யார் தலைமையில் இட ஒதுகீடு போரட்டம் என்பதல்ல இங்கு கேள்வி எங்களுக்கு இட ஒதுகீடு வேண்டும் என்பதே கோரிக்கை. இங்கு அமைப்பு ரீதியாக செயல் படும் சகோக்கள் கவணிக்க வேண்டு உங்கள் பிற கூட்டங்களுக்கு இல்லாத ஆதரவு இட ஒதுகீடு போரட்டம் ஆர்ப்பாட்டங்களு மக்கள் தரும் ஆதரவை உற்று நோக்குங்கள் எங்கள் மக்களின் ஏக்கம் புரியும். உண்ணால்தான் என்னால்தான் என்னும் பேச்சை முடித்துக் கொள்ளுங்கள் நம்மால் நம் வாழ்வுரிமையை மீட்க முடியும் என்று நம்புங்கள் மக்களை திரட்டுங்கள்.
                                                                          இட ஒதுகீட்டுக்காண ஆவணப் படம் நன்றி ஆளூர் ஷாநவாஸ்